வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு


வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 12 Oct 2022 12:15 AM IST (Updated: 12 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

முதுமலையில் சாலையோரம் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே, வனவிலங்குகளை இடையூறு செய்யக்கூடாது என வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

நீலகிரி

கூடலூர்,

முதுமலையில் சாலையோரம் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே, வனவிலங்குகளை இடையூறு செய்யக்கூடாது என வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

யானைகள் நடமாட்டம்

முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், மான்கள், கரடிகள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதுதவிர கேரளா, கர்நாடக மாநிலங்கள் அருகே உள்ளதால் சுற்றுலா மற்றும் சரக்கு வாகனங்கள் அதிகளவவில் இயக்கப்படுகிறது.

இந்தநிலையில் முதுமலை சாலையோரம் காட்டு யானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அடிக்கடி வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்து வருகின்றனர். இதனால் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டு சம்பந்தப்பட்ட பயணிகளை எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.

வனத்துறை அறிவுரை

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

வனவிலங்குகளை பார்த்து ரசிக்க சுற்றுலா பயணிகளுக்காக வனத்துறை சார்பில், வாகன சவாரி நடக்கிறது. ஆனால், சிலர் வனத்துறையின் விதிமுறையை மீறி சாலையோரம் தென்படும் வனவிலங்குகளுக்கு இடையூறு செய்து வருகின்றனர். இதனால் காட்டு யானைகள் மனிதர்கள் மற்றும் வாகனங்களை தாக்கும் அபாயம் உள்ளது. இதனால் அடிக்கடி ரோந்து சென்று கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யக்கூடாது. மேலும் முதுமலை சாலைகளில் வாகனங்களை நிறுத்தி வனவிலங்குகளை புகைப்படம் எடுக்கக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



Next Story