வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு
வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு
கோத்தகிரி
கோத்தகிரி பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதிகள் பசுமைக்கு திரும்பி உள்ளன. மேலும் சாலையோரங்களில் உள்ள புல்வெளிகள் செழித்து வளர்ந்துள்ளன. இதனால் கோத்தகிரி பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று இரவு கோத்தகிரியில் இருந்து கொணவக்கரை செல்லும் சாலையில் காட்டெருமைகள் கூட்டமாக உலா வந்தன. இதேபோன்று அரவேனு பகுதியில் இருந்து ராப்ராய் செல்லும் சாலையோரமும், அங்குள்ள தேயிலை தோட்டத்திலும் கரடி உலா வந்தது. இது தவிர அனையட்டி பிரிவு பகுதியில் இருந்து மிஷன் காம்பவுண்ட் பகுதியை இணைக்கும் மாற்று சாலையில் இன்று அதிகாலையில் சிறுத்தை அமர்திருந்ததாக அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் தெரிவித்தார். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கோத்தகிரி பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். மேலும் தொழிலாளர்கள் பணி முடிந்து விட்டு இரவில் வீடுகளுக்கு செல்லும் போது தனியாக செல்லாமல் கூட்டமாக செல்ல வேண்டும் என்றனர்.