பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x

நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஈரோடு

பவானிசாகர்:

நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகவும் மேலும் கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து அவ்வப்போது நீர் மின் உற்பத்திக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 598 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 81.49 அடியாக இருந்தது.

நீர்வரத்து அதிகரிப்பு

அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 150 கன அடி தண்ணீரும், தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்துக்காக வினாடிக்கு 400 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கனஅடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டது.

நேற்று இரவு 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 938 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 81.53 அடியாக இருந்தது. பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 150 கன அடி தண்ணீரும், தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன பகுதிக்கு வினாடிக்கு 400 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டது.


Next Story