குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு


குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது

தென்காசி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த ஆண்டுக்கான சீசன் முடிந்த நிலையில் அருவிகளில் தண்ணீர் தொடர்ந்து விழுந்து வருகிறது. குறைவாக விழும் தண்ணீரிலும் சுற்றுலா பயணிகள் குளித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மிதமான மழை குற்றாலத்தில் பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக நேற்று காலையில் இருந்து குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது சீசன் இல்லாததால் மிகவும் குறைவான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகின்றனர். கார்த்திகை மாதம் முதல் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் குற்றாலத்திற்கு வருவார்கள். நேற்று ஐப்பசி முதல் நாள் என்பதால் சில பக்தர்களும் குற்றாலத்திற்கு வந்தனர்.



Next Story