கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,350 கன அடியாக அதிகரிப்பு
கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,350 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
பவானிசாகர்
கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,350 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
கீழ்பவானி வாய்க்கால்
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையில் இருந்து கடந்த 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் முடிவடையாததால் திறக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது இதையடுத்து சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. சீரமைப்பு பணிகள் முடிந்ததை தொடர்ந்து பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் மீண்டும் கடந்த 19-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது வினாடிக்கு 200 கன அடியாக திறக்கப்பட்டது.
அதிகரிப்பு
இது படிப்படியாக அதிகாித்து நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் வினாடிக்கு 1,350 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அப்போது அணைக்கு வினாடிக்கு 467 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து ஆற்றுக்கு வினாடிக்கு 950 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.