அரசு பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா
அரகண்டநல்லூர் அரசு பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.
திருக்கோவிலூர்,
மாணவர்களிடம் அறிவியல், கணித ஆர்வத்தை தூண்டு வகையில் திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் அ.சா.ஏ.பிரபு ஆகியோர் கலந்து கொண்டு அறிவியல் வானவில் மன்றத்தை தொடங்கி வைத்து பேசினர். நிகழ்ச்சியில் தி.மு.க.மாவட்ட பிரதிநிதி மணம்பூண்டி பிரபு, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஏவி.ஆர்.குமார் அனிதாமோகன், இளைஞர் அணி அமைப்பாளர் தினகரன், நகர துணைச் செயலாளர் சிங்கசீனு, நிர்வாகி புஷ்பராஜ், நகர பொருளாளர் காமராஜ், கிளை செயலாளர்கள் பாண்டுரங்கன் மற்றும் சேட்டு, பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகர், வார்டு செயலாளர் செந்தமிழ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் வரவேற்றார். முடிவில் அறிவியல் ஆசிரியை தமிழரசி நன்றி கூறினார்.