வேதாரண்யத்தில், காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல்


வேதாரண்யத்தில், காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல்
x
தினத்தந்தி 15 April 2023 12:15 AM IST (Updated: 15 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து வேதாரண்யத்தில், ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து வேதாரண்யத்தில், ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

காங்கிரசார் ரெயில் மறியல்

பிரதமர் மோடிகுறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் கோர்ட்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது.

இதை கண்டித்தும், ராகுல் காந்தியின் மீது பொய் வழக்கு போடப்பட்டதை கண்டித்தும் நாகை மாவட்டம் வேதாரண்யம் ரெயில் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு முன்னாள் எம்.பி. பி.வி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

40 பேர் கைது

வேதாரண்யத்துக்கு வந்த டெமோ ரெயிலை காங்கிரஸ் கட்சியினர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்னர். அப்போது வேதாரண்யம் போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் வந்து ரெயில் மறியலில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 40 பேரை கைது செய்தனர்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு பின் அகல ெரயில்பாதை திட்டம் தொடங்கப்பட்டு 8-ந் தேதி திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே ரெயில் சேவை தொடங்கப்பட்ட நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலாக காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story