தூத்துக்குடியில்அரசின் சாதனை விளக்க கண்காட்சி, கலைநிகழ்ச்சிகள்


தூத்துக்குடியில்அரசின் சாதனை விளக்க கண்காட்சி, கலைநிகழ்ச்சிகள்
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் அரசின் சாதனை விளக்க கண்காட்சி, கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

கண்காட்சி

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் 'ஓயாஉழைப்பின் ஓராண்டு கடை கோடி தமிழரின் கனவுகளை தாங்கி' என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசின் அரும்பணிகள் மற்றும் சாதனைகளை விளக்கும் சிறப்பு புகைப்பட கண்காட்சி கடந்த 10-ந் தேதி தொடங்கியது. கண்காட்சியில் மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் 48 திட்டம், இல்லம் தேடிகல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், புதுமைப் பெண் திட்டம், பசுமைத் தமிழகம் திட்டம், மீண்டும் மஞ்சப்பை திட்டம், நான் முதல்வன், கல்லூரிகனவு, வானவில் மன்றம் போன்ற பல்வேறு புரட்சிகரமான திட்டங்கள் தொடர்பாக புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், பொதுமக்கள் தங்களை தாங்களே புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 'செல்பி பாயிண்ட், பகுதியில் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

கலைநிகழ்ச்சி

மேலும் கண்காட்சியில் கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகள், தேவராட்டம் பரதநாட்டியம், பாட்டுக் கச்சேரி, நையாண்டி மேளம் மற்றும் மேற்கத்திய நடன நிகழ்ச்சிகள் பொதுமக்களை கவரும் வகையில் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த கலைநிகழ்ச்சிகள் வருகிற 19-ந் தேதி வரை நடக்கிறது. இந்த புகைப்படக் கண்காட்சி மற்றும் கலைநிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.


Next Story