தூத்துக்குடியில் மக்கள் நலப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில் மக்கள் நலப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 July 2023 12:15 AM IST (Updated: 5 July 2023 4:26 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மக்கள் நலப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்,

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நேற்று 2009-ம் ஆண்டு முதல் காலமுறை ஊதியத்தை கணக்கிட்டு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் நலப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி தாலுகா அலுவலம் முன்பு தமிழ்நாடு அரசு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராமசுப்பு தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநில துணை பொது செயலாளர் வெங்கடேசன் பேசினார்.

காலமுறை ஊதியம்

ஆர்ப்பாட்டத்தில் வாய்மொழியாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ள மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளர்களாக மக்கள் நல பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும், 2009 ஜனவரி முதல் பெற்றுவந்த காலமுறை ஊதியத்தை கணக்கிட்டு வழங்கிட வேண்டும். பணி வரன்முறை, பணி நிரந்தரம் செய்யவேண்டும். இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

கலந்து கொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் மகேந்திரபிரபு, இணை செயலாளர் சின்னதம்பி, அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் தவமணி பீட்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story