தூத்துக்குடியில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில்  கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 July 2023 12:15 AM IST (Updated: 19 July 2023 4:23 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படியும் நலவாரிய கூட்டம் முடிவின்படியும் 60 வயது பூர்த்தியான கட்டுமான தொழிலாளர்களுக்கு மாத ஓய்வுதியின் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தூத்துக்குடி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் கோரம்பள்ளம் நலவாரிய அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் பேச்சிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சொ.மாரியப்பன் துவக்கவுரையாற்றினார். சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ரசல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க மாவட்ட பொருளாளர் காசி, மாவட்ட நிர்வாகிகள் தெய்வேந்திரன், சிவபெருமாள், ஸ்டான்லி, செல்வகுமார், பார்வதி, முத்துச்சாமி, ராஜேஷ், பெருமாள், கணேசன், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story