தூத்துக்குடி மீனவர் காலனியில்கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் சிக்கினர்


தினத்தந்தி 11 Aug 2023 12:15 AM IST (Updated: 11 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மீனவர் காலனியில் கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மீனவர் காலனியில் கஞ்சா விற்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா விற்பனை

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் மேற்பார்வையில், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் ற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தூத்துக்குடி மீனவர் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

4 வாலிபர்கள் கைது

விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி மேலசண்முகபுரத்தை சேர்ந்த பால்ராஜ் மகன் லோகேசுவரன் (வயது 21), தூத்துக்குடி வண்ணார் தெருவை சேர்ந்த கலைமணி மகன் உதயகுமார் (24), தூத்துக்குடி கீழசண்முகபுரம் பகுதியை சேர்ந்த பிரந்த்ரா ஷா மகன் விகாஷா (25), சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் விக்னேஷ் (32) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 250 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த 4 வாலிபர்களையும் கைதுசெய்தனர். கைது செய்யப்பட்ட லோகேசுவரன் மீது ஏற்கனவே 4 வழக்குகளும், உதயகுமார் மீீது 3 வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story