பிளஸ்- 2 பொதுத் தேர்வில் 88.28 சதவீத மாணவர்கள் தேர்ச்சி


பிளஸ்- 2 பொதுத் தேர்வில் 88.28 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வில் 88.28 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். அதேபோல் 10-ம் வகுப்பு தேர்வில் 93.07 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

திருவண்ணாமலை


திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வில் 88.28 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். அதேபோல் 10-ம் வகுப்பு தேர்வில் 93.07 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். விகிதம்

பொதுத் தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் நேற்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் பிளஸ்- 2 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இணையதளம் மூலம் வெளியிடப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 252 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 36 மாணவர்களும், 14 ஆயிரத்து 182 மாணவிகளும் என 28 ஆயிரத்து 218 பேர் எழுதினர். இதில் 11 ஆயிரத்து 714 மாணவர்களும், 13 ஆயிரத்து 198 மாணவிகளும் என 24 ஆயிரத்து 912 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி விகிதம் 88.28 ஆகும். இந்த தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் 37-வது இடத்தை பிடித்து உள்ளது.

10-ம் வகுப்பு

அதேபோல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை 504 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 16 ஆயிரத்து 622 மாணவர்களும், 15 ஆயிரத்து 583 மாணவிகளும் என 32 ஆயிரத்து 205 பேர் எழுதினர். இதில் 14 ஆயிரத்து 971 மாணவர்களும், 15 ஆயிரத்து 2 மாணவிகளும் என 29 ஆயிரத்து 973 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

இதன் தேர்ச்சி விகிதம் 93.07 ஆகும். இந்த தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் 7-வது இடத்தை பிடித்து உள்ளது. பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளின் படி மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

10 இடம் பின்தங்கியது

கடந்த 2019-ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவின் படி தமிழகத்தில் 27-வது இடத்தில் இருந்த திருவண்ணாமலை மாவட்டம் தற்போது பின்தங்கி 37 -வது இடத்தை பிடித்து உள்ளது. 2019-ம் ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகத்தில் 20-வது இடத்தில் இருந்த திருவண்ணாமலை மாவட்டம் முன்னேற்றம் அடைந்து 7-வது இடத்தை பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story