நள்ளிரவில் கும்பலாக வீட்டிற்குள் நுழைய முயன்ற கரடிகளால் பரபரப்பு


நள்ளிரவில் கும்பலாக வீட்டிற்குள் நுழைய முயன்ற கரடிகளால் பரபரப்பு
x

கரடிகளை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே நான்கு கரடிகள் வீட்டிற்குள் நுழைய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு கோத்தகிரி அருகே உள்ள சேலடாகுடியிருப்பு பகுதியில் உணவு, தண்ணீர் தேடி நான்கு கரடிகள் வீட்டிற்குள் நுழைய முயன்றன.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடியிருப்புவாசிகள், சத்தம் போட்டு தேயிலை தோட்டத்திற்குள் விரட்டினர். வனத்துறையினர் கூண்டு வைத்து கரடிகளை பிடிக்க வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனிடையே, வீட்டு வாசலில் கரடிகள் சுற்றித்திரிந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story