சிவகிாியில் ரூ.60½ லட்சத்துக்கு எள் விற்பனை


சிவகிாியில் ரூ.60½ லட்சத்துக்கு எள் விற்பனை
x
தினத்தந்தி 18 Jun 2023 3:31 AM IST (Updated: 18 Jun 2023 7:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகிாியில் ரூ.60½ லட்சத்துக்கு எள் விற்பனையானது.

ஈரோடு

சிவகிரி

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் ஏலம் நடந்தது. 608 மூட்டை எள்ளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் கருப்பு ரக எள் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.116.99-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.150.99-க்கும் ஏலம் போனது.

சிவப்பு ரக எள் கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.122.49-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.156.11-க்கும் ஏலம் போனது. மொத்தம் 45 ஆயிரத்து 229 கிலோ எடையுள்ள எள் ரூ.60 லட்சத்து 59 ஆயிரத்து 638-க்கு விற்பனையானது.


Next Story