சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,030-க்கு ஏலம்
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு 30-க்கு ஏலம் போனது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு 30-க்கு ஏலம் போனது.
பூ மார்க்கெட்
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும்.
அதன்படி நேற்றும் வழக்கம்போல் காலை 7 மணிக்கு பூக்கள் ஏலம் தொடங்கியது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 2 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
மல்லிகைப்பூ கிலோ ரூ.2,030
நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2 ஆயிரத்து 30-க்கும், முல்லை ரூ.1,280-க்கும், காக்கடா ரூ.750-க்கும், செண்டுமல்லி ரூ.140-க்கும், பட்டுப்பூ ரூ.130-க்கும், ஜாதிமல்லி ரூ.1,000-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.120-க்கும், அரளி ரூ.200-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் விற்பனை ஆனது.
நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,505-க்கும், முல்லை ரூ.960-க்கும், காக்கடா ரூ.800-க்கும், செண்டுமல்லி ரூ.90-க்கும், பட்டுப்பூ ரூ.115-க்கும், ஜாதிமல்லி ரூ.1,750-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.70-க்கும், அரளி ரூ.220-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
புத்தாண்டு பிறப்பு
நேற்று முன்தினத்தை விட நேற்று மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.525-ம், முல்லை ரூ.320-ம், ெசண்டுமல்லி ரூ.50-ம், பட்டுப்பூ ரூ.15-ம், ஜாதிமல்லி ரூ.250-ம், சம்பங்கி ரூ.50-ம், செவ்வந்தி ரூ.20-ம் விலை உயர்ந்து ஏலம் போனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பூ மார்க்கெட் சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறுகையில், 'நாளை (அதாவது இன்று ஞாயிற்றுக்கிழமை) புத்தாண்டு பிறப்பு என்பதால் தமிழ்நாடு மட்டுமின்றி கேரள மாநிலத்திலும் அதிக அளவில் விசேஷங்கள், விழாக்கள் நடக்கிறது. இதனால் வியாபாரிகளிடையே பூக்களை ஏலம் எடுப்பதில் போட்டி ஏற்பட்டது. குறிப்பாக கேரள வியாபாரிகள் போட்டி போட்டு பூக்களை ஏலம் எடுத்து சென்றனா். இதன்காரணமாக பூக்கள் விலை உயர்ந்து ஏலம் போனது,' என்றனர்.