கோவில்பட்டியில் ரெயில் தண்டவாளத்தில் ஆண் பிணம்
கோவில்பட்டியில் ரெயில் தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கிருஷ்ணா நகர் ரெயில்வே தண்டவாளப் பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக ஆலம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி வேலுச்சாமி தூத்துக்குடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதன் பேரில் ரெயில்வே போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு தண்டவாலத்தில் உடலில் பலத்த காயங்களுடன் ஆண் பிணமாக கிடந்தார். அவர் கைலி மற்றும் சட்டை அணிந்து இருந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என உடனடியாக தெரியவில்லை. அவரது உடலை போலீசார் கைப்பற்றி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார்? தணடவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்தாரா? என்று கோணங்களில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.