கன்னியாகுமரியில் கடல்நீர் மட்டம் தாழ்வால் படகு போக்குவரத்து தாமதம்


கன்னியாகுமரியில்  கடல்நீர் மட்டம் தாழ்வால் படகு போக்குவரத்து தாமதம்
x

கன்னியாகுமரியில் கடல்நீர் மட்டம் தாழ்வால் படகு போக்குவரத்து தாமதம்

கன்னியாகுமரி

கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்து விட்டு திரும்புவது வழக்கம்.

இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகளை இயக்கி வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை. அதாவது கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக படகு போக்குவரத்து 1 மணி நேரம் நிறுத்தப்பட்டது. மீண்டும் கடல் இயல்புநிலைக்கு திரும்பிய பிறகு படகு சேவை தொடங்கியது.

அதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்த்து விட்டு திரும்பினர்.


Next Story