ஈரோட்டில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துவதால் பொதுமக்கள் அவதி


ஈரோட்டில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துவதால் பொதுமக்கள் அவதி
x

ஈரோட்டில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

ஈரோடு

ஈரோட்டில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

100 டிகிரி வெயில்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை நீடிக்கிறது. குறிப்பாக பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயில் கொளுத்தி வருகிறது. வெயிலின் தாக்கம் காரணமாக வீட்டில் புழுக்கம் அதிகமாக உள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

வெயிலுடன் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 5 நாட்களாக தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது.

வீட்டுக்குள்ளேயே முடக்கம்

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் இளநீர், மோர், கரும்பு பால் உள்ளிட்ட உடலுக்கு குளிர்ச்சி தருபவற்றை விரும்பி வாங்கி குடித்து வருகிறார்கள். இதைப்போல் வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, நுங்கு வியாபாரமும் ஒருசில இடங்களில் நடந்து வருகிறது.

வெயில் கடுமையாக உள்ளதால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, ஈ.வி.என் ரோடு, மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மதிய நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. வெயில் வாட்டி வருவதால், பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.


Next Story