ரேஷன் கடையில் முறைகேட்டில் ஈடுபட்டவருக்கு சிறை தண்டனை


ரேஷன் கடையில் முறைகேட்டில் ஈடுபட்டவருக்கு சிறை தண்டனை
x

ரேஷன் கடையில் முறைகேட்டில் ஈடுபட்டவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தவர் மாங்கொட்டை அருகே மா.கீழப்பட்டியை சேர்ந்தவர் அடைக்கலம். இவர் ரேஷன் கடையில் முறைகேடாக நடந்ததாக புதுக்கோட்டை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறையினர் வழக்குப்பதிவு செய்து புதுக்கோட்டை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பில் அடைக்கலத்திற்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் வழங்கப்பட்டது. அவர் ஜாமீனில் விடுதலை பெற்றார் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story