பலத்த மழையால் வீடு இடிந்து சேதம்


பலத்த மழையால் வீடு இடிந்து சேதம்
x

கோத்தகிரி அருேக பலத்த மழையால் வீடு இடிந்து சேதமடைந்தது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று முன்தினம் இரவு கோத்தகிரி அருகேகுண்டூர் காலனி கிராமத்தை சேர்ந்த கமலேஸ்வரி என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் மீனாட்சி சுந்தரம், கிராம உதவியாளர்கள் மூர்த்தி, அறிவாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் வீடு இடிந்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு வழங்கும் நிவாரண தொகையான ரூ.4,100 உடனடியாக வழங்கப்பட்டது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி கோத்தகிரியில் 13 மில்லி மீட்டர், கோடநாட்டில் 17 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.


Next Story