பொங்கலூர் அருகே பட்டப்பகலில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி 21 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர்.
பொங்கலூர் அருகே பட்டப்பகலில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி 21 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர்.
பொங்கலூர்
பொங்கலூர் அருகே பட்டப்பகலில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி 21 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கூட்டுறவு சங்க செயலாளர்
பொங்கலூர் அருகே உள்ள எலவந்தியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 58). இவர் அந்த பகுதியில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை அவரது மனைவி கோவிலுக்கு சென்று விட்டார். மகனும் வேலைக்கு சென்று விட்டார். பழனிசாமியும், அவரது மகளும் கள்ளிப்பாளையத்தில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றுள்ளனர்.
பின்னர் வங்கியில் இருந்து ஒரு மணி நேரம் கழித்து வீடு திரும்பி உள்ளனர். அப்போது வீட்டின் மேற்கூரை பிரிக்கப்பட்டுள்ளது கண்டு பழனிசாமி அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.
21 பவுன் நகை திருட்டு
அப்போது பீரோவில் வைத்திருந்த 2 பவுன் செயின், ஒரு பவுன் கம்மல் மற்றும் 18 பவுன் தங்க நாயணங்கள் திருட்டுப்போனது தெரியவந்தது. இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் திருட்டு குறித்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.
பட்டப் பகலில் வீட்டின் மேற்கூரையை பிரித்து திருட்டு நடைபெற்ற சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.