வீடுபுகுந்து இளம்பெண்ணுக்கு மிரட்டல்- 4 பேர் மீது வழக்கு


வீடுபுகுந்து இளம்பெண்ணுக்கு மிரட்டல்- 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வீடுபுகுந்து இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தென்காசி

திருவேங்கடம்:

திருவேங்கடம் அடுத்துள்ள அழகாபுரி கிராமம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் மகள் முனீஸ்வரி (வயது 23). இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த பலசரக்கு கடை நடத்தி வரும் முத்துமாரியப்பன் என்பவருக்கும் இடையே கடையில் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் முனீஸ்வரியின் வீட்டிற்கு முத்துமாரியப்பன் அவரது மகன் செல்வம், உறவினர்கள் அன்னராஜ், கணேசன் ஆகியோர் சென்று தகராறில் ஈடுபட்டு, மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முனீஸ்வரி திருவேங்கடம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், முத்துமாரியப்பன், செல்வம் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story