இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x

பேட்டையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை பேட்டை செக்கடி பஸ்நிறுத்தம் அருகே இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் சிவா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் சுடலை, ராஜ்செல்வம், சங்கர், செல்வகுமார், மாவட்ட துணை தலைவர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாநில பொது செய்தி தொடர்பாளர் ஆறுமுக கனி, மாநில பேச்சாளர் சிங்கே பிரபாகரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை வலியுறுத்தி பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் காளி தேவியை இழிவுபடுத்திய இயக்குனர் லீனா மணிமேகலை மீது நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் வழக்கு பதிவு செய்யாததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பேட்டை நகர தலைவர் லட்சுமணன் நன்றி கூறினார்.


Next Story