இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டம்
எரியோட்டில் இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எரியோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில செயலாளர் வி.எஸ்.செந்தில்குமார் தலைமை தாங்கினார். கோட்ட பொறுப்பாளர் சங்கர்கணேஷ், மாவட்ட துணைத்தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ் வரவேற்றார். கிராமங்கள் தோறும் இந்து முன்னணியின் கொடியை ஏற்றுவது, இந்துக்களின் சிறப்பு பற்றி பிரசாரம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்ட முடிவில் மாநில பொதுச்செயலாளர் செந்தில்குமார் நிருபர்களிடம் கூறுகையில், இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் குடிநீர், கழிவறை, சுகாதார வசதி செய்து கொடுக்க வேண்டும். தமிழகத்தில் இந்துக்களுக்கு எதிராக தி.மு.க. செயல்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறையில் ஊழல் நடைபெறுகிறது. இதற்கு பொறுப்பேற்று, அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும்.
ஆன்மிக பெரியோர்களை கொண்டு கமிட்டி அமைத்து, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலை நிர்வகிக்க வேண்டும். மதமாற்ற தடைச்சட்டம், பொது சிவில் சட்டம், பசுவதை தடைச்சட்டம் ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும். இந்துக்களின் கருத்துக்களை முன்னெடுக்கும் கட்சிகளுக்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்து முன்னணி ஆதரவு அளிக்கும் என்றார்.