மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகலெக்டர் ராஜகோபால் சுன்கரா பங்கேற்பு
கோபியில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் நடந்த மாணவ-மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பங்கேற்றார்.
கோபியில் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் நடந்த மாணவ-மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பங்கேற்றார்.
உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
"நான் முதல்வன் - உயர்வுக்கு படி" என்ற திட்டத்தின் கீழ் பள்ளிக்கூட மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான உயர் கல்வி வழிகாட்டும் சிறப்பு நிகழ்ச்சி கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறும்போது, "உயர்கல்வியில் என்னென்ன படிப்புகள் உள்ளது என்பதை மாணவ-மாணவிகளுக்கு விளக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அரசு தொழில் பயிற்சி நிலையங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் எந்த வகையான படிப்புகள் உள்ளன, தொழில் படிப்புகள் என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது", என்றார்.
கையேடுகள்
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகம், தாலுகா அலுவலகம், மகளிர் திட்டம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகியன சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும், உயர் கல்வி குறித்த ஆலோசனைகள் மற்றும் கையேடுகள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கோபி ஆர்.டி.ஓ. பிரியதர்ஷினி, உதவி இயக்குனர்கள் ராதிகா (வேலை வாய்ப்பு), ஜெயகுமார் (மாவட்ட தொழில் பயிற்சி நிறுவனம்), மாவட்டவேலை வாய்ப்பு அதிகாரி ஜோதி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குழந்தைராஜன், மாவட்ட சமூக நல அதிகாரி சண்முகவடிவு, மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி சரவணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.