போக்குவரத்து நெருக்கடி


போக்குவரத்து நெருக்கடி
x

போக்குவரத்து நெருக்கடி

திருப்பூர்

வீரபாண்டி

திருப்பூர் மாநகரின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது போல, வாகனங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு போக்குவரத்துநெருக்கடியும் தொடர்ந்து நீடித்து வருகிறது. திருப்பூர்- பல்லடம் சாலை வழியாக தினமும் 1000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. திருப்பூர் மாநகரில் முக்கிய போக்குவரத்து சாலையாக பல்லடம் சாலை அமைந்துள்ளது. பல்லடம் சாலையில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் சாலைகள் குடிநீர், கேபிள், கியாஸ் போன்ற பணிக்காக தோண்டப்பட்டுள்ள குழிகள் தற்போது வரை சரியாக மூடப்படாமல் உள்ளது. பழைய பஸ் நிலையத்திலிருந்து வீரபாண்டி பிரிவு சாலையை கடக்கும் வரை வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் கடந்து செல்கின்றனர். நொச்சிபாளையம் பிரிவு பகுதியில் சிக்னல் வசதி இல்லாததால் வாகன ஓட்டிகள் இடையில் புகுந்து செல்கின்றன. இதனால் போக்குவரத்து பிரச்சினை ஏற்படுவதோடு, விபத்துகளும் ஏற்படுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. நொச்சிபாளையம் பிரிவில் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சிக்னல் அமைத்து அல்லது போக்குவரத்து போலீசாரை நியமித்து, விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story