கொல்லிமலையில் பலத்த மழை - தரைப்பாலம் மூழ்கியதால் பொதுமக்கள் அவதி...!
கொல்லிமலையில் பெய்த பலத்த மழையின் காரணமாக புத்தக்கல் பகுதியில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது.
சேந்தமங்கலம்,
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள வலப்பூர் நாடு ஊராட்சியில் புத்தக்கல் கிராமம் வழியாக ஓடும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்குள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கி காணப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள கொளத்து குழி, பள்ளத்து வளவு, கருமூர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் பிற பகுதிகளுக்கு செல்ல அந்த ஆற்றை கடந்து சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே அந்த ஆற்றின் குறுக்கே சிறுபாலம் அமைக்க வேண்டி நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story