தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு
x

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்துவருகின்றது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கோவை, நெல்லை மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், குமரி மற்றும் தென்காசி ஆகிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக கடலோரம் , வங்கக்கடல் பகுதிகள், கர்நாடகா மாநில கடலோரம், கேரளா மாநில கடலோரப்பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story