கோத்தகிரியில் பலத்த மழை
கோத்தகிரியில் பலத்த மழை பெய்தது.
நீலகிரி
கோத்தகிரி,
கோத்தகிரி பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வறட்சியான சீதோஷ்ண நிலை நிலவி வந்தது. இந்தநிலையில் 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. நேற்று காலை 10 மணி முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மதியம் சற்று நேரம் மழை நின்ற நிலையில், மாலையில் மீண்டும் மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வார விடுமுறை நாட்களில் சுற்றுலா வந்த பயணிகள் பலத்த மழை காரணமாக சுற்றுலா தலங்களுக்கு சென்று கண்டு ரசிக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மழையால் குளிர்ந்த காலநிலை நிலவியது. தேயிலை சாகுபடி அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story