தலைமை ஆசிரியர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


தலைமை ஆசிரியர்கள் சங்கத்தினர்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி

தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியலும், முதுகலை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியலும் தயார் செய்து பதவி உயர்வு வழங்க வேண்டும். அனைத்து அரசு உயர்நிலைப்பள்ளிகளிலும் குறைந்தபட்சம் 8 பட்டதாரி ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும். பள்ளிகளுக்கான மின்கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும்.

பள்ளிகளில் அமைந்துள்ள உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்துக்கு கணினி பயிற்றுனர் நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஜான்சன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் வரவேற்று பேசினார். கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மாவட்ட தலைவர் மணிவண்ணன், மாவட்ட துணைத்தலைவர் செந்தில்குமார், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில அமைப்பு செயலாளர் சிவக்குமார், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் மோகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story