கருங்கலில்திருடன் என நினைத்து முதியவருக்கு அடி-உதை
கருங்கலில் திருடன் என நினைத்து முதியவருக்கு அடி-உதை விழுந்தது.
கருங்கல்:
கருங்கலில் திருடன் என நினைத்து முதியவருக்கு அடி-உதை விழுந்தது.
திருடன் என நினைத்து தாக்குதல்
கருங்கல் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை முன்பு கடந்த 18-ந் தேதி அன்று மதுவாங்க வந்த ஒருவரிடம் முதியவர் நைசாக சட்டைப்பையில் இருந்த பண பர்சை திருடி சென்றார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் அங்கு பதிவாகியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். அதன்பேரில் விசாரணை நடந்து வந்தது.
இந்தநிலையில் நேற்று ஒரு முதியவர் அந்த பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் அவர் தான் திருடன் என நினைத்து சரமாரியாக தாக்கினர்.
போலீஸ் விசாரணை
பின்னர் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்ததால் அவரை சிகிச்சைக்காக கருங்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பொதுமக்களால் தாக்கப்பட்ட நபர் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை தனுவச்சபுரம் பகுதியைச் சேர்ந்த மதுசூதனன் (வயது 62) என்பது தெரியவந்தது.
மேலும் இதுதொடர்பாக கருங்கல் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.