அகஸ்தியர் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்


அகஸ்தியர் அருவியில்  ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்  சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்
x

அகஸ்தியர் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

அகஸ்தியர் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

ஆர்ப்பரித்து கொட்டுகிறது

பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் ஆண்டு முழுவதும் ஆர்ப்பரித்து கொட்டும் பிரசித்தி பெற்ற அகஸ்தியர் அருவி உள்ளது. இந்த அருவி ஆன்மிக அருவியாகவும் விளங்குவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள காரையாருக்கு செல்லும் மலைப்பாதையில் சாலை பணிகள் நடைபெற்றதாலும், சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழா, தொடர்ந்து பராமரிப்பு பணிகள் உள்ளி்ட்ட காரணங்களால் கடந்த ஜூலை 12 -ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 25 நாட்கள் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.

குளிக்க அனுமதி

இந்தநிலையில் நேற்று முதல் மீண்டும் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குடும்பம் குடும்பமாக குளித்து மகிழ்ந்தனர்.

இருப்பினும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.


Next Story