செங்கல்பட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காவலர் பணி - கலெக்டர் தகவல்


செங்கல்பட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காவலர் பணி - கலெக்டர் தகவல்
x

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காவலர் பணியிடம் காலியாக உள்ளது. அதனை பூர்த்தி செய்யும் பொருட்டு கீழ்காணும் தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. காலி பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் அலுவலகத்தில் நேரில் அனைத்து கல்விச்சான்றுகள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டையுடன் வருகை தர வேண்டும். விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களின் நகல்களை தன் கையொப்பமிட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், செங்கல்பட்டு - 603 111 என்ற முகவரியிலோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும்.

காலிப்பணியிட விவரம் பொதுப்பிரிவினர் வயது-32, பி.சி, எம்.பி.சி, சாதியினருக்கு - 34 வயதும், எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு 37 வயதும், முன்னாள் ராணுவத்தினர் - 48 வயதுக்கும், மாற்றுத்திறனாளிகள் வயது உச்ச வரம்புடன் கூடுதலாக 10 ஆண்டுகள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், செங்கல்பட்டு என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.1.2023 (மாலை 5.45). குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்களும், சரிவர பூர்த்தி செய்யப்படாத மற்றும் உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்களும் ஏற்கப்படமாட்டாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நியமனத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யவோ, நேர்காணலை ஒத்திவைக்கவோ, நியமன அறிக்கையை எந்தவித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யவோ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், செங்கல்பட்டு அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story