அரியலூரில் இன்று எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் அரியலூரில் இன்று நடக்கிறது/
அரியலூர்
அரியலூர் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் உடையார்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) தலைமையில் இன்று (புதன்கிழமை) காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story