மூதாட்டி தீக்குளித்து சாவு
சிவகிரியில் மூதாட்டி தீக்குளித்து இறந்தார்.
சிவகிரி:
சிவகிரி மேல ரதவீதி வலம்புரி விநாயகர் கோவில் அருகே 3-வது சந்து பகுதியை சேர்ந்தவர் அய்யனார் மனைவி வெள்ளையம்மாள் (வயது 80). இவர் சுமார் 5 மாதமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த வெள்ளையம்மாள், கடந்த 26-ந் தேதி வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவரை மீட்டு சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியிலும், தொடர்ந்து நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு வெள்ளையம்மாள் இறந்தார். இதுகுறித்து சிவகிரி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நவமணி வழக்குப்பதிவு செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.