ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
தேனி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது.
கிராம சபை கூட்டம்
சுதந்திர தின விழாவையொட்டி நேற்று, தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது. அதன்படி, கடமலைக்குண்டுவில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சந்திராதங்கம் தலைமை தாங்கினார். துணை தலைவர் பிரியா தனபாலன், ஊராட்சி செயலர் சின்னச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கிராமங்களில் ஏற்படுத்த வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்த பொதுமக்களின் கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. பாலூத்து கிராமத்தில் ஊராட்சி தலைவர் ஜெயப்பிரியா உதயகுமார், நரியூத்து கிராமத்தில் ஊராட்சி தலைவர் தங்கப்பாண்டி, முத்தாலம்பாறையில் ஊராட்சி தலைவர் அமுதாஅய்யனன், வருசநாடு கிராமத்தில் ஊராட்சி தலைவர் மணிமுத்து, மயிலாடும்பாறையில் ஊராட்சி தலைவர் பார்வதி அன்பில்சுந்தரம் ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.
துரைச்சாமிபுரத்தில் ஊராட்சி தலைவர் மாயகிருஷ்ணன், எட்டப்பராஜபுரத்தில் ஊராட்சி தலைவர் ராசாத்தி பால்ச்சாமி, மூலக்கடை கிராமத்தில் ஊராட்சி தலைவர் சுப்பிரமணி, கோம்பைத்தொழுவில் ஊராட்சி தலைவர் பால்கண்ணன் ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் நிறைவேற்றம்
பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், கீழவடகரை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் அழகர்சாமிபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் செல்வராணி செல்வராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். மேற்பார்வையாளராக ஊராட்சி ஒன்றிய பணியாளர் ஜெயசீலன் கலந்து கொண்டார். கூட்டத்தில் சுகாதாரம், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் மருதையம்மாள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் ஜெயபாண்டியன் நன்றி கூறினார்.
வடபுதுப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் அன்னபிரகாஷ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பிரியா செந்தில் முன்னிலை வகித்தார். முடிவில் ஊராட்சி செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார். லட்சுமிபுரம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் ஜெயமணி சந்திரன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. துணைத் தலைவர் ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் நந்தினி நன்றி கூறினார். சருத்துப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சாந்தி கண்ணையன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆண்டவர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அடிப்படை வசதிகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஊராட்சி செயலாளர் லெனின் நன்றி கூறினார்.
ஆண்டிப்பட்டி
ஆண்டிப்பட்டி ஒன்றியம், அனுப்பப்பட்டி ஊராட்சியில் தலைவர் சுப்புலட்சுமி தங்கையா, டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் தலைவர் வேல்மணி பாண்டியன், திம்மரசநாயக்கனூர் ஊராட்சியில் தலைவர் அக்ஷயா ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. டி.சுப்புலாபுரம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் அழகுமணி தலைமை தாங்கினார். இதில் துணைத் தலைவர் கண்ணதாசன், ஊராட்சி செயலர் பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சண்முகசுந்தரபுரம் ஊராட்சியில் தலைவர் ரத்தினம், பிச்சம்பட்டி ஊராட்சியில் தலைவர் மகாலட்சுமி ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கன்னியப்பபிள்ளைபட்டி ஊராட்சியில் தலைவர் காளித்தாய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஊராட்சி செயலர் ஜோதிபாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சித்தார்பட்டி ஊராட்சியில் தலைவர் சிவரெங்கு, ராஜதானி ஊராட்சியில் தலைவர் பழனிசாமி, தேக்கம்பட்டி ஊராட்சியில் தலைவர் சந்திரலேகா, தெப்பம்பட்டி ஊராட்சியில் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மரிக்குண்டு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் செல்லமணி மகாலிங்கம் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் பிச்சைமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜி.உசிலம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் சுமேந்திரன் தலைமை தாங்கினார்.