அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் ஏ.ராணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தின்(ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்.) மூலம் அரசின் வரவு, செலவு, ஊழியர் சம்பளம் மற்றும் இதர பட்டியல் தயாரிப்பு போன்றவை கணினி மயமாக்கல் செய்வதற்கு தனியார் நிறுவனம் மூலம் இயங்கு தளம் உருவாக்கப்பட்டது. இதனால் வலைதளத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்படுகிறது. எனவே இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.



Related Tags :
Next Story