வழிகாட்டி பெயர் பலகை மீது அரசு பஸ் மோதிய விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி


வழிகாட்டி பெயர் பலகை மீது அரசு பஸ் மோதிய விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி
x

வழிகாட்டி பெயர் பலகை மீது அரசு பஸ் மோதிய விபத்தில் பலியானவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

சென்னை,

பெருங்களத்தூரிலிருந்து கோயம்பேடு நோக்கிச் சென்று கொண்டிருந்த மாநகர பஸ் ஒன்று, ஜி.எஸ்.டி. சாலையில், ஆலந்தூர்-ஆசர்கானா பஸ் நிறுத்தத்திற்கு முன்னதாக செல்லும்போது, சாலையின் அருகில் இருந்த வழிகாட்டி பலகையில் மோதியது.

இதில், அப்பலகை சாலையில் சாய்ந்ததில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பி.சண்முக சுந்தரம் (வயது 28) என்பவர் பலத்த காயமடைந்தார்.

ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் உயிரிழந்தார். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

ரூ.3 லட்சம் நிவாரண நிதி

அதோடு, போக்குவரத்து கழக நிதியிலிருந்து 1 லட்சம் ரூபாயும், முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாயும், ஆக மொத்தம் 3 லட்சம் ரூபாயினை நிவாரணமாக வழங்கிட முதல்-அமைச்சர் ஆணையிட்டதன் அடிப்படையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இந்நிதியினை நேரில் சென்று வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story