அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

கும்பகோணத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்

தஞ்சாவூர்

சி.ஐ.டி.யூ. அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க கும்பகோணம் மண்டல பொதுச்செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். இதில், சங்கத்தின் துணை பொதுச் செயலாளர் மகேந்திரன், துணைத் தலைவர் அழகர்சாமி, சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் ஜீவபாரதி மற்றும் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கு அவர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே பணப்பலன்களை வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். போக்குவரத்து துறைக்கு தரமான உதிரி பாகங்கள் வழங்க வேண்டும். போக்குவரத்து துறையில் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.






Next Story