அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி
ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டக் கிளை தலைவர் இல.பாஸ்கரன் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாலாஜி, வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் துணைத் தலைவர் சுரேஷ், நெடுஞ்சாலைத்துறை அலுவலர் சங்க சண்முகம், மண்டல துணை தாசில்தார்கள் ரவிச்சந்திரன், திருவேங்கடம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பரசுராமன் அனைவரையும் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் சி.பி.எஸ்.எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண் விடுப்பு வழங்கப்பட வேண்டும், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர்கள் ஊர் புற நூலகர்களை நிரந்தரப்படுத்தி காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும், 41 மாத பணி நீக்கம் காலத்தை சாலை பணியாளர்களுக்கு மீண்டும் பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிடப்பட்டது.
இ்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகி மனோகரன், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத் துணைத் தலைவர் தேவராஜ் உள்பட அனைத்து அரசு துறை அலுவலர்களும் பங்கேற்றனர். முடிவில் அரசு ஊழியர் சங்க பொருளாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.