8 பேரிடம் தங்க சங்கிலி பறிப்பு; பெண் கைது


8 பேரிடம் தங்க சங்கிலி பறிப்பு; பெண் கைது
x

8 பேரிடம் தங்க சங்கிலி பறிப்பு; பெண் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

விராலிமலை:

விராலிமலை முருகன் கோவிலில் கடந்த 12-ந் தேதி வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மர்ம ஆசாமிகள் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த 8 பெண்களிடம் இருந்து தங்க சங்கிலிகளை பறித்துச் சென்றனர். இதுகுறித்து புகார்களின் பேரில், விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று இந்த நகை திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய சேலம் மாவட்டம், காக்காபாளையம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமு மனைவி துளசி (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story