மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை மும்முரம்


மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை மும்முரம்
x

மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை மும்முரமாக நடந்தது

திருநெல்வேலி

மேலப்பாளையம் கால்நடை சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும். இங்கு ஆடுகளுடன், மாடு, கோழி, கருவாடும் விற்பனை செய்யப்படுகிறது.

தென்மாவட்டங்களில் ஆடிமாதம் கருப்பசாமி, சுடலை மாடசாமி, சப்பாணி மாடசாமி, உதிரமாடசாமி, பேச்சியம்மாள், இசக்கியம்மன் உள்ளிட்ட கோவில்களில் கொடைவிழா நடைபெறுவது வழக்கம். அப்போது பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக ஆடுகளை பலியிடுவது வழக்கம்.

தற்போது ஆடிமாதம் பிறந்ததையொட்டி நேற்று மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை செய்ய, வாங்க ஏராளமானவர்கள் திரண்டனர். நெல்லை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடு வியாபாரிகள் குவிந்தனர். இதனால் மேலப்பாளையம் சந்தை களைகட்டியது. நேற்று ஏராளமான வெள்ளாடுகளும், செம்மறி ஆடுகளும் மும்முரமாக விற்பனையானது.


Next Story