#லைவ் அப்டேட்ஸ்: பதற்றம்... கோஷம்... பாதியில் வெளியேற்றம்...? அ.தி.மு.க பொதுக்குழு வெற்றியா...! தோல்வியா...! - முழு விவரம்


தினத்தந்தி 23 Jun 2022 6:51 AM IST (Updated: 23 Jun 2022 8:49 PM IST)
t-max-icont-min-icon

பரபரப்பான சூழலில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் சலசலப்புடன் நிறைவுபெற்றது.


Live Updates

  • 23 Jun 2022 11:39 AM IST

    ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக உறுப்பினர்கள் கோஷமிடுவதால் பரபரப்பு

    ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு மலர் கொத்து கொடுத்து வரவேற்றார் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்

  • 23 Jun 2022 11:32 AM IST


    அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்காத நிலையில், எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் மூத்த நிர்வாகிகள்

    அதிமுக பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தின் காத்திருப்பு அறையில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளார் 

  • 23 Jun 2022 11:23 AM IST



  • 23 Jun 2022 11:20 AM IST


    அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி வருகை

    வானகரம் மண்டபம் முன்பு திரண்டு உள்ள ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்

  • 23 Jun 2022 11:08 AM IST


    அதிமுக பொதுக்குழு நடைபெறும் வானகரம் பகுதிக்கு வந்தடைந்தார் எடப்பாடி பழனிசாமி

    எடப்பாடி பழனிசாமியை வரவேற்று அவருக்கு ஆதரவாக அதிமுக தொண்டர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

  • 23 Jun 2022 10:58 AM IST


    அதிமுக பொதுக்குழுவில் உறுப்பினர்கள் வாக்குவாதம்

    * ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பி வருகின்றனர். 

    * இரு தரப்பு உறுப்பினர்கள் வாக்குவாதத்தால் அதிமுக பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தில் பரபரப்பு நிலவுகிறது.

    * பொதுக்குழு உறுப்பினர்கள் அமைதி காக்க அதிமுக மூத்த தலைவர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

  • 23 Jun 2022 10:48 AM IST



  • 23 Jun 2022 10:46 AM IST


    அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மேடைக்கு வந்து விட்டு கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • 23 Jun 2022 10:46 AM IST


    நீதிமன்ற ஆணைப்படி கூட்டம் நடைபெறுவதால் தொண்டர்கள் அனைவரும் அமைதிகாக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி வலியுறுத்தி உள்ளார். 

  • 23 Jun 2022 10:46 AM IST


    எடப்பாடி வாழ்க என்றும், இரட்டை தலைமை வேண்டாம் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர்களின் முழக்கமிட்டு வருகின்றனர். 


Next Story