அனைத்து திருச்சபைகளின் கூட்டமைப்பு சார்பில் பொதுக்கூட்டம்
அனைத்து திருச்சபைகளின் கூட்டமைப்பு சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்முறையை கண்டித்தும், சிறுபான்மை மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுத்து அமைதி ஏற்படுத்தக்கோரியும் திருச்சி மாவட்ட அனைத்து திருச்சபைகளின் கூட்டமைப்பு சார்பில் புத்தூர் நால்ரோடு அருகே நேற்று மாலை கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை பேராயர் கிறிஸ்டியன் சாம்ராஜ், தென்னிந்திய திருச்சபை பேராயர் சந்திரசேகரன், கத்தோலிக்க திருச்சபை ஆயர் ஆரோக்கியராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். பவுலின் மேரி, கவிஞர் நந்தலாலா ஆகியோர் சிறப்புரையாற்றினர். மணிப்பூர் வன்முறையை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். எம்.பி.க்கள் மற்றும் நீதிபதிகளை உள்ளடக்கிய உண்மை கண்டறியும் குழுவை அமைத்து முழுமையான அறிக்கை வெளியிட வேண்டும். வெவ்வேறு இடங்களில் தஞ்சம் அடைந்துள்ள மக்களுக்கு உணவு, உடை, மருத்துவம் உள்ளிட்ட அவசர உதவிகள் செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.