தெப்பக்குளத்தில் குப்பைகளை அகற்றும் பணி


தெப்பக்குளத்தில் குப்பைகளை அகற்றும் பணி
x
தினத்தந்தி 9 April 2023 12:15 AM IST (Updated: 9 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தெப்பக்குளத்தில் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது.

சிவகங்கை

தூய்மை பாரத திட்டத்தின் கீழ் சிவகங்கை நகரில் குப்பைகளை அகற்றி தூய்மையாக வைத்திருப்பது தொடர்பான விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் சிவகங்கை அரண்மனை வாசலில் இருந்து நகர சபை தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. நகர சபை ஆணையாளர் பாண்டீஸ்வரி முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் அயூப்கான், வீனஸ் ராமநாதன், ஜெயகாந்தன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், சண்முகராஜன், வீரகாளை, சுகாதார ஆய்வாளர் தன்னாயிரமூர்த்தி மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி சிவகங்கை தெப்பக்குளத்தில் கிடந்த குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியை நகர சபை தலைவர் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:- சிவகங்கை நகரின் மைய பகுதியில் தெப்பக்குளத்தில் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணி தொடர்ந்து நடைபெறும். தெப்பக்குளத்தில் மிதக்கும் குப்பைகள் படகு மூலம் சேகரித்து அகற்றப்படும். மேலும் பொதுமக்களும், வணிகர்களும் குப்பைகளை தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளாக பிரித்து வழங்க வேண்டும். குப்பைகளை குளத்தில் போடுவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு போடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சிவகங்கை நகர் தெப்பக்குளத்தில் சுற்றுச்சுவர்களை உயர்த்தவும் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.


Next Story