இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்
புளியங்குடியில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
புளியங்குடி:
புளியங்குடி நகராட்சிக்குட்பட்ட சிந்தாமணியில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு புளியங்குடி நகரசபை தலைவர் விஜயா சவுந்தர பாண்டியன் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் மகேஸ்வரி சந்திரசேகரன், நகராட்சி ஆணையாளர் சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரசபை துணை தலைவர் அந்தோணிசாமி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் புளியங்குடி நகராட்சி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து சிந்தாமணி கண்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ரேபிஸ் எனப்படும் வெறிநோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
முகாமில் கால்நடை மருத்துவர்கள் கருப்பையா, சிவகுமார் சங்கர் கணேஷ், ரவிச்சந்திரன், எழிலரசன், மற்றும் கால்நடை ஆய்வாளர் ஹாஜரா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை சிந்தாமணி கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் கருப்பையா, நகராட்சி சுகாதார ஆய்வாளர் கைலாச சுந்தரம், கணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.