திருச்சி கோர்ட்டில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்
திருச்சி கோர்ட்டில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
திருச்சி
திருச்சி கோர்ட்டில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கத்தில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கே.பாபு முகாமை தொடங்கி வைத்ததுடன், பரிசோதனையும் செய்து கொண்டார். தொடக்க விழா நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் கண்ணன், செயற்குழு உறுப்பினர் சுதர்சன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முகாமில் ரத்த சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் மருத்துவ ஆலோசனைகள், நுரையீரல் பரிசோதனையும் இலவசமாக செய்யப்பட்டது. காலை முதல் மாலை வரை நடந்த இந்த முகாமில் நீதிபதிகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் பரிசோதனை செய்து கொண்டனர்.
Related Tags :
Next Story