இலவச சட்ட விழிப்புணர்வு முகாம்


இலவச சட்ட விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 17 Oct 2023 2:45 AM IST (Updated: 17 Oct 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

சிறுகுடி ஊராட்சி நிர்வாகம் மற்றும் மதுரை பிகஸ் இலவச சட்ட உதவி, ஆராய்ச்சி மையம் சார்பில் இலவச சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம், சிறுகுடியில் நடந்தது.

திண்டுக்கல்

சிறுகுடி ஊராட்சி நிர்வாகம் மற்றும் மதுரை பிகஸ் இலவச சட்ட உதவி, ஆராய்ச்சி மையம் சார்பில் இலவச சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம், சிறுகுடியில் நேற்று முன்தினம் நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோகிலவாணி வீரராகவன் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். மதுரை பிகஸ் சட்ட உதவி மைய நிறுவனர் ஆண்டிராஜ், ஊராட்சி துணைத்தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் பெண்கள், குழந்தைகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் மற்றும் பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச சட்ட உதவிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் குடும்பநலன் குறித்த ஆலோசனை, சட்ட உதவி, சட்டம் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இதில், சிறுகுடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் வீரபாண்டி நன்றி கூறினார்.


Next Story