ஆரணியில் இலவச கண் சிகிச்சை முகாம்


ஆரணியில் இலவச கண் சிகிச்சை முகாம்
x

ஆரணியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஆரணி ஹோஸ்ட் அரிமா சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது.

ஆரணி நகராட்சி சாலையில் உள்ள அரிமா சங்க சுகாதார வளாகத்தில் நடந்த முகாமிற்கு சங்க தலைவர் டி.தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆர்.சம்பத், பொருளாளரான பொறியாளர் வி.சதீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் வி.கே.ஆர்.வெங்கடேசன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் கிட்டப் பார்வை, தூரப்பார்வை, கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் நோய் உள்பட கண்பார்வை சம்பந்தமாக 480 பேர் முகாமில் கலந்து கொண்டனர்.

இதில் 62 பேருக்கு கண்ணில் விழிலென்ஸ் பொறுத்த தேர்வு செய்யப்பட்டு அவர்கள் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முகாமில் சங்க வட்டார தலைவர் என்.சீனிவாசன், சங்க ஒருங்கிணைப்பாளர் வி. பி. உதயசூரியன், முதல் உதவி தலைவர் சங்கரராமன், சங்க முன்னாள் தலைவர்கள் சந்திரசேகரன், எல்.சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story