இலவச கண் சிகிச்சை முகாம்
சோளிங்கரில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு சோளிங்கர் நகர தி.மு.க., சோளிங்கர் அரிமா சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவ மையம் இணைந்து கண் சிகிச்சை முகாம், உடல் உறுப்பு அறுவை சிகிச்சை முகாம், உடல் உறுப்பு தானம் பற்றிய சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு சோளிங்கர் நகர தி.மு.க. ெயலாளர் வழக்கறிஞர் மூ.கோபி தலைமை தாங்கினார். அரிமா சங்க செயலாளர் திருமால் முன்னிலை வகித்தார். மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் வினோத் காந்தி கலந்து கொண்டு கண் சிகிச்சை முகாம் உடல் உறுப்பு அறுவை சிகிச்சை முகாமை தொடங்கி வைத்து உடல் உறுப்பு தானம் பற்றி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார். சோளிங்கர் மற்றும் சுற்றுப்புற கிராமத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். கண் அறுவை சிகிச்சைக்காக 200-க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டு கோவை சங்கரா மருத்துவ மையத்திற்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட துணை செயலாளர் சிவானந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், நகராட்சி துணை தலைவர் பழனி, பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், நகராட்சி உறுப்பினர்கள் அன்பரசு, லோகேஸ்வரி சரத்பாபு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.